தமிழ் நாடு அரசு, அரசு ஊழியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக சில தினங்களுக்கு முன்பு உறுதியளித்திருந்தது. இதற்கு அரசு ஊழியர்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது அதோடு முதலமைச்சருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் ஒரு சில சங்க ஊழியர்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கமும் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு அளித்திருந்தது. 

Advertisment

அதே சமயம் தங்களை கலந்தாலோசிக்காமலேயே இந்த அறிவிப்பிற்கு சங்க நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறி, சங்க உறுப்பினர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு, சங்க ஊழியர்கள் இன்று (08.01.2025) போராட்டம் நடத்தினர். அரசு ஊழியர்கள் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தக்கோரி வேண்டுகோள் வைத்திருந்தனர். ஆனால் அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை, அதாவது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்திருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து ஜாக்டோ ஜியோ, தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தது. 

Advertisment

இந்த நிலையில், தலைமைச் செயலக சங்க உறுப்பினர்கள், யாரைக்கேட்டு சங்க நிர்வாகிகள் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்?. சங்க உறுப்பினர்களை கேட்காமலேயே, எப்படி நீங்களே முடிவு எடுத்தீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். “இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அதாவது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தால் எங்களுக்கு எந்த வித பலனும் இல்லை. பழைய ஓய்வூதிய திட்டம் தான் தங்களுக்கு வேண்டும்” என்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

cm-mks-sad

அரசு அறிவித்த புதிய அல்லது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்பது அரசு ஊழியர்கள் பெற்ற கடைசி மாத சம்பளத்தின் 50% தொகை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 10% பிடித்தம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு தற்போது ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு சம்மதம் தெரிவித்தாலும் கூட, சங்க நிர்வாகிகள் இதற்கு சம்மதம் தெரிவித்ததால் கலக்கமடைந்த ஊழியர்கள், எங்களைக் கேட்காமல் சங்க நிர்வாகிகள் தன்னிச்சையாக எப்படி இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று தலைமைச்செயலாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment