திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவுப் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்து கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தத்ம் என்ற இடத்தில் சென்றுக் கொண்டிருந்தது. அச்சமயமத்தில் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தடுப்பைத் தாண்டி, சாலையில் எதிர்த் திசையில் சென்றுக் கொண்டிருந்த இரு கார்களுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் இரு கார்களும் அப்பளம் போல் உருக்குலைந்தன.
இதனையடுத்து இந்த விபத்து குறித்து உடனடியாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் விபத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்திற்கான காரணம் என்பது குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. கடலூர் அருகே அரசுப் பேருந்தும், கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Follow Us