Advertisment

அரசுப் பேருந்து மோதி இருவர் பலி!

siren-police
நாகபட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக திருச்செந்தூர் செல்லும் அரசுப் பேருந்தை வேதாரண்யம் சிவஜோதி மகன் செல்வக்குமார் (வயது 40) ஓட்டியுள்ளார். இந்த பேருந்தில் 56 பயணிகளுடன் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே சென்றது. அப்போது வடக்கூர் அம்மன் கோயில் நுழைவாயிலில் இருந்து ஒரு பைக்கில் வந்த தண்டலை சண்முகம் மகன் முருகன் (வயது 45) பிரதான சாலையில் ஏறும் போது வேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியுள்ளது. 
Advertisment
 
மேலும் அந்தப் பகுதியில் நின்ற 60 வயது மூதாட்டி மீதும் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மணமேல்குடி போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு போக்குவரத்தைச் சரி செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Advertisment
bus incident pudukkottai govt bus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe