‘மகளிர் விடியல் பயணம்’ என்ற பெயரில் பெண்கள் இலவசமாக பயணிக்கு வகையில் குறிப்பிட்ட பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. இந்த பேருந்தில் பணிக்கும் பெண்களை சில நடத்துனர்கள், ‘ஓசியில் தானே பயணம் செய்கிறீர்கள்.. என்று கேட்ட சம்பவங்களும் பல அரங்கேறி இருக்கின்றனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய பிறகு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக போக்குவரத்துறை எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் இது ஓன்ற சம்பவங்கல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
அந்த வகையில் கோவை, வெள்ளக்கிணர் பகுதியில் நேற்று(19.9.2025) மாலை தூய்மைப் பணிகளை முடித்துவிட்டு, துடியலூர் செல்ல அவ்வழியாக வந்த 111 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்தில் மூன்று பெண் தூய்மைப் பணியாளர்கள் ஏறினர். அவர்கள் பேருந்தில் ஏறும்போது, அதன் ஓட்டுநர், "ஏம்மா? உங்களுக்கு ஓசி பஸ் பின்னால் வருது, அதுல ஏறுங்க" என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த மூன்று பெண் தூய்மைப் பணியாளர்களும் ஓட்டுநரிடம், "எப்படி எங்களை அப்படிச் சொல்லலாம்? நாங்கள் பணம் கொடுத்து டிக்கெட் எடுக்கிறோம். பிறகு ஏன் எங்களை ஓசி பஸ்ஸில் வரச் சொல்கிறாய்?" என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஓட்டுநருக்கு ஆதரவாகப் பேசிய நடத்துநரையும் அவர்கள் கடுமையாகத் தாக்கி பேசினர். இந்தச் சம்பவத்தைப் பேருந்தில் இருந்த ஒரு பயணி வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் பொன்முடி "ஓசி பஸ்" என்று கூறி சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது கோவையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் இவ்வாறு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/20/2-2025-09-20-07-39-53.jpg)