திருநெல்வேலி மாவட்டம் பாளையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றின் மாணவிகள் மது அருந்துகிற வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானதால் விசாரணைகள் பரபரக்கின்றன. தற்போதைய ரீல்ஸ் , இன்ஸ்ட்டா மோகத்திற்கு ஆளான அந்த மாணவிகள் ஆறு பேரும் மது அருந்துகிற வீடியோ சோஷியல் மீடியாவில் சூட்டைக் கிளப்பியிருக்கின்றன.
பள்ளியின் விடுதியில் தங்கிப் படிக்கிற ஆறு மாணவிகளும் ஒன்பதாவது வகுப்பு மாணவிகளாம். இந்த மோகத்திற்கு ஆட்பட்டு அப்படிச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் மாவட்ட முதன்மை கல்வித்துறை வரை போக, அதன் அதிகாரியும் சம்பவத்தை விசாரித்தார். அதில் நடந்த சம்பவம் பற்றித் தெளிவானதாம். ஆனாலும் அவர் நடவடிக்கை மேற்கொள்ளாமல் போகவே சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப் பிறகு வீடியோ வெளியேறி சர்ச்சையைக் கிளப்பி விட்டதாம்.
இந்த வீடியோ வெளியானதில் பள்ளி தொடர்பான ஒருவருக்கும் தொடர்பிருப்பதாகவும் அவர்களுக்கு மது வாங்கி கொடுத்தவர் யார் என்பது பற்றிய விசாரணையும் தற்போது வேகமெடுத்திருக்கிறதாம். இந்த விவகாரம் பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்டது. அவர்களின் விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. எங்களுக்கு இது தொடர்பான புகார் வரவில்லை. ஆனாலும் அது பற்றிக் கண்காணித்து வருவதாக போலீஸ் தரப்பிலும் சொல்லப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/14/tvl-student-tas-video-2025-12-14-21-57-12.jpg)