சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை இந்து அறநிலை துறை நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலில் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வந்தது கோவில் கும்பாபிஷத்திற்காக கடந்த 30ஆம் தேதி யாகசாலை பூஜை தொடங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து தினம் தோறும் பூஜைகள் நடைபெற்ற வந்த நிலையில் நவம்பர் 3-ந்தேதி கும்பாபிஷேகம் காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற்றது.
முன்னதாக 9 மணிக்கு ஏகசாலை நடைபெற்ற இடத்தில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. மேல தாள வாத்தியங்கள் முழங்க கோவில் விமானத்தில் ஏற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்கு கோவிலில் காலை 6:00 மணியிலிருந்து பக்தர்கள் குவிந்தவாறு இருந்தனர். இதில் சிதம்பரம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள்15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
  
 Follow Us