சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகை சார்பாக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்திற்கான அழைப்பு கொடுக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடமும் அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் ஆளுநர் மாளிகை அழைப்பை  திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருந்தன.

Advertisment

கலைஞர் பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ள நிலையில், தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக ஆளுநர் இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளார்.

ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக முதல்வர் புறக்கணித்ததால் அவர் பங்கேற்கவில்லை. தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் பங்கேற்றுள்ளார். அதேபோல் அதிமுக, பாஜக கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். பாஜக சார்பில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு வருகை புரிந்துள்ளனர். அதேபோல அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி இன்பத்துரை, அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் வெங்கடேஷ், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர். தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன்  பங்கேற்றுள்ளார். தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.