தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் அந்த அதிகரிப்பிற்கு ஏற்ற வகையில் வகுப்பறைகள், ஆசிரியர்கள், கழிப்பறைகள் பற்றாக்குறை என்பதும் உயர்ந்து கொண்டே வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ளது அரசர்குளம் மேல்பாதி இங்கு 1961 ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசுப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டு அரசு உயர் நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/04/a4662-2025-08-04-22-40-39.jpg)
இந்தப் பள்ளியில் தற்போது, 173 மாணவர்கள், 162 மாணவிகள் என 335 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 10 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தனை பேர் உள்ள பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் கழிவறையை தவிர வேறு யாருக்கும் கழிவறைகள் இல்லை. அதனால் ஆசிரியர்கள், மாணவரிகள் மாற்றுத்திறனாளிகள் கழிபப்பறைகளையே பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்களோ அவசரத்திற்கு பள்ளிக்கு அருகில் உள்ள புதர்களைத் தேடிச் சென்று இயற்கை உபாதைகளை கழித்துவிட்டு வருகின்றனர்.
பல வருடங்களுக்கு முன்பு மாணவர்கள் பயன்பாட்டில் இருந்த ஒற்றை கழிவறைக்குள் பாம்பு வந்ததால் மாணவர்கள் அதை பயன்படுத்தாமலேயே சேதமடைந்து விட்டது. அதாவது, பள்ளியில் சுற்றுச்சுவர் பாதுகாப்பு இல்லாததால் பாம்புகள், நாய்கள் படையெடுத்து வருகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/04/a4665-2025-08-04-22-41-27.jpg)
இந்நிலையில் தான் தங்கள் குழந்தைகளின் நலன் கருதி கழிவறைகளும், சுற்றுச்சுவரும் கட்டித் தரக் கோரி பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் பல வருடமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏனோ அந்தக் கோரிக்கை இன்னும் ஏற்கப்படாமலேயே உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது பள்ளிமாணவர்களும், ஆசிரியர்களும் தான். அதிகாரிகளோ, அல்லது உள்ளூரிலேயே உள்ள பெரிய தொழிலதிபர்களோ, முன்னாள் மாணவர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகளோ மனது வைத்தால் விரைவில் அரசர்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் பல வருட கழிவறை கோரிக்கையை, மனக்குறையை போக்கலாம்.
யார் மனமிறங்கி வந்து இந்த நல்ல செயலை செய்யப் போகிறார்கள்? விரைவில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.