Advertisment

‘பிளாஸ்டிக் வாட்டர் கேனுக்கு நோ...!’  -  அசத்தும் அரசுப் பள்ளி

5

மண்ணையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகளிலிருந்து மக்களைக் காக்க வேண்டும். இதனால் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் விதமாகக் கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பைகளைப் பயன்படுத்த அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை. பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க உற்பத்தியையே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒரு அரசுப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பிளாஸ்டிக் தீமைகளை மாணவிகளுக்கு எடுத்துரைக்கும் விதமாகத் தண்ணீர் பாட்டில்களில் கூட பிளாஸ்டிக் இருக்கக் கூடாது என்பதால் எவர்சில்வர் தண்ணீர் பாட்டில்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7.5% அரசு உள் இட ஒதுக்கீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக 28 மாணவிகளை மருத்துவம் படிக்கவைத்தும், அதற்கு முன்பு பல மருத்துவர்களையும், நூற்றுக்கணக்கான மாணவிகளைப் பொறியியல் உள்ளிட்ட பல துறைப் படிப்புகளுக்கும் அனுப்பியுள்ள கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்தான் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு “நோ” சொல்லிவிட்டு எவர்சில்வர் தண்ணீர் பாட்டில்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisment

4

இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துவிட்டோம். பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவிகள் கூட எவர்சில்வர் வாட்டர் பாட்டிலையே பயன்படுத்துவார்கள். சுமார் 1000 மாணவிகள் படிக்கின்றனர்; இதில் ஒருவர் கூட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பயன்படுத்தமாட்டார். இதனைப் பார்த்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைப் போல மாவட்டத்தில் உள்ள மற்றப் பள்ளிகளையும் மாற்ற அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது” என்றனர்.

மாணவிகளோ, “பிளாஸ்டிக் பயன்படுத்தித் தூக்கி வீசுவதால் மண் பாதிக்கிறது, நீர்நிலைகள் பாதிக்கின்றன. அதனால் எங்கள் பள்ளியில் நாங்கள் யாரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்துவதில்லை. எவர்சில்வர் பாட்டில்களில்தான் தண்ணீர் வைத்திருப்போம்” என்றனர்.

இது போல ஒவ்வொரு பள்ளியிலும் நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

govt school Plastic
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe