புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மேலப்பட்டு ஊராட்சி பிள்ளைவயல் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஓட்டுக் கட்டடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொடக்கக் கல்வியும் தனித்திறன் பயிற்சிகளும் அளிக்கப்படுவதால் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பாகவே படித்துள்ளனர்.

Advertisment

ஆனால், பழைய ஓட்டுக் கட்டடிம் பல ஆண்டுகளாக மழைக் காலங்களில் தண்ணீர் கசிவு ஏற்ட்டதால் பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும், கிராமத்தினர் சார்பிலும் பள்ளிக்கு 2 வகுப்பறை புதிய தார்சு கட்டடம் வேண்டும் என்று ஊராட்சி ஒன்றியத்தில் கோரிக்கை மனு கொடுத்து வருகின்றனர். தற்போது இந்தப் பள்ளியில் சுமார் 35 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். படிப்பிலும், தனித்திறனிலும் தொடர்ந்து சாதித்து வருகின்றனர். மாணவ, மாணவிகளின் தனித்திறன் வெற்றிகளை கிராம மக்கள் பதாகை வைத்து கொண்டாடி வருகின்றனர். இப்படியான இந்தப் பள்ளியில் தான் மழைத் தண்ணீரில் இருந்து மாணவர்களை காப்பாற்ற ஓட்டு கட்டடத்தின் மேல் தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.

Advertisment

இது குறித்து கிராமத்தினர் கூறும் போது, பிள்ளைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடர்ந்து நல்ல இடத்தில் உள்ளது. கற்றல் கற்பித்தலும் நன்றாக உள்ளதால் தனியார் பள்ளிக்கு போன குழந்தகளைக் கூட எங்கள் பள்ளியில் சேர்த்துள்ளனர். பக்கத்து ஊர்களில் இருந்தும் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வருகிறார்கள் ஆனால் வகுப்பறை கட்டடம் மோசமாக உள்ளதால் தயங்குகிறார்கள். இப்போது பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. பகலில் மழை பெய்தால் மாணவர்கள் தலையில் மழைத்தண்ணீர் விழும். மேலும் சுவர்கள் நனைந்து ஈரமாகி மின்கசிவு ஏற்படுமோ என்ற அச்சமும் உள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி தார்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இனிமேலாவது புதிய வகுப்பறை கடட்டடம் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.