இ.சி.ஆர். முதல் அக்கரை வரை ஆறு வழித்தட சாலை அமைக்கும் பணியில் நிலம் எடுக்கும் திட்டத்தில் 150 கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்படும் வகையில் மோசடி செய்த அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  

Advertisment

பதிவுத்துறை என்பது மனித வாழ்வில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பணியை மேற்கொண்டு வருகிறது. பதிவு சட்டம் என்பதே ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதைத் தடுப்பதற்கும், போலி ஆவணங்களை தடைசெய்வதற்கும் உருவாக்கப்பட்டது. தவறுகளை தடுக்க பதிவுத்துறை தலைவர் பல முறை சுற்றுறிக்கைகளை வழங்கி வருகிறார்.

Advertisment

சென்னை மாவட்டம் சோழிங்கநல்லூர் வட்டம் நீலாங்கரை கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக கிழக்கு கடற்கரைச் சாலையான திருவான்யூர் முதல் அக்கரை வரை ஆறு வழிச்சாலை அமைக்கும் திட்டம் தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறையால் அறிவிக்கப்பட்டது. பிரிவு 15/2 கீழ் 19.5.25 தேதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு பல ஆயிரம் கோடி இத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது. 

5920
road Photograph: (police)

இசிஆர் சாலையில் இருப்பக்கமும் உள்ள நில உரிமையாளர்களிடம் இருந்து நிலத்தை எடுத்து அந்த நிலத்திற்கான உரியப் பணத்தை இழப்பீடாக வழங்கவும், மேலும் அனாதினம் நிலம், கோவில் நிலம், ஆள் இல்லாத நிலங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு நேர்மையாக செயல்பட வேண்டிய அதிகாரிகள் திட்டமிட்டு பதிவுத்துறையில் பதிவாகாத ஆவண எண்களை போலி ஆவணங்களாக வைத்துப் பதிவு செய்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

சார்பதிவாளர் சண்முகம் மற்றும் உதவியாளர் ரமேஷ், வட்டாட்சியர் பரிமலகாந்தன், பொன்னுசாமி, வட்டாட்சியர் ஶ்ரீதர் ஆகியோர் ஒவ்வொரு ஆவண பதிவிற்கும் 1 கோடி வரை லஞ்சம் பெற்று  விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததில் இதை ஒப்புதல் வாக்கு மூலமாகவும் தெரிவித்துள்ளனர். பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்றதும் மட்டுமல்லாமல் அரசு இடமான கோவில் நிலம், அனாதினம், ஆளே இல்லாத இடங்களுக்கும் போலி ஆவணங்களைத் தயாரித்து இவர்களே 150 கோடிக்கு மோசடி செய்து அரசு கஜானாவை நேரடியாக கொள்ளையடிக்க ஒட்டுமொத்தமாக மூளையாக செயல்பட்டவர்டி.ஐ.ஜி ரவீந்திரநாத் தான் என வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.