தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கற்பகவல்லி (வயது34). தென்காசியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணிக்குச் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இடைகால் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் உயிர் இழந்த ஏழு நபர்களில் இவரும் ஒருவர்.

Advertisment

சங்கரன்கோவிலில் இருந்து தென்காசிக்கு பணிக்காக செல்லும்போது விபத்தில்  உயிரிழந்துள்ளார். அவரின் கணவர் ஏற்கனவே இறந்து ஐந்து ஆண்டுகளான நிலையில் தன் இரண்டு பெண் குழந்தைகளான 13 வயது ஜோஸ்ரீ, 8 வயது ஜெயஶ்ரீ ஆகியவர்களுடன் கற்பகவல்லி தனியாக வசித்து வந்தார். அவர் கணவர் இல்லாத சூழலிலும் படித்து அரசு பணிக்கு தேர்வாகி அரசு பணி செய்து வந்தார். இந்நிலையில் அவரும் விபத்தில் உயிரிழந்ததால் அவரது இரண்டு மகள்களில் ஒருவர் 8ம் வகுப்பும்  ஒருவர் 3ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

Advertisment

அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அரசு அவர்களுக்கு கல்வி உதவியும் வருங்காலத்தில் தாயின் அரசு பணி வாரிசுபடி அவர்களுக்கு வருவதற்கான உறுதியையும் அரசு வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உறவினர்கள் பொருளாதார வளர்ச்சி இல்லாத நிலையில் அந்த குழந்தைகளுக்கு மூன்று வேளை உணவு மட்டுமே வழங்க முடியும், அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரவேண்டும் தற்போது அவர்கள் வசிக்கும்  ஓட்டு வீடு சீரற்ற நிலையிலும் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளது. வீட்டினை சரி செய்து தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.