ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து தலவுமலைக்கு 22-ம் நம்பர் அரசு நகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. தலவுமலை, வீரப்பம்பாளையம், அரச்சலூர், பள்ளி யூத், அவல்பூந்துறை, கஸ்பாபேட்டை, நாடார் மேடு வழியாக ஈரோடு பேருந்து நிலையம் வந்தடையும். இந்த நகர பேருந்து நேற்று மாலை 5 மணி அளவில் தலவுமலையிலிருந்து வழக்கம் போல் ஈரோடு பேருந்து நிலையம் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

Advertisment

பேருந்து அசோகபுரம் பூந்துறை ரோடு, எம்.எம்.எஸ் திருமண மண்டபம் அருகே வந்தபோது  முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. நிலைமையைப் புரிந்து கொண்டு சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர் சாலையின் ஓரமாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் மாற்று பேருந்தில் பயணிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். தக்க சமயத்தில் பேருந்தை சாமர்த்தியமாக இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் ஓட்டுநரை பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisment