Government bus overturned in field - Public demand Photograph: (govt bus)
கடலூரில் அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவத்தில் இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து மாளிகைமேடு, தட்டாம்பாளையம் வழியாக மேல்குமாரமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வயதில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த பெண் பயணி மற்றும் பேருந்து ஓட்டுநர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். அந்த பகுதியில் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. உடனடியாக இதற்குத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.