தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து கீழே இறங்கி மின்கம்பத்தின் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து வாசுதேவநல்லூர் நோக்கி 35B  என்ற எண் கொண்ட அரசு பேருந்து சுமார் 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென அரசு பேருந்தின் முன்பக்க ஷாக் அப்சார்பர் உடைந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் இருந்து கீழே இறங்கி மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் மின்கம்பம் கீழே சாய்ந்ததில் மின் வயர்கள் பேருந்து மீது விழுந்தது.

Advertisment

இந்த விபத்தில் பெண்கள் குழந்தைகள் என 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அந்த பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு காவலர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.