சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதி வரை செல்லக்கூடிய அரசு டீலக்ஸ் பேருந்து கோயம்பேட்டில் ஐடியல் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போனது. நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் போக்குவரத்து கழகத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.

Advertisment

தேடியும் பேருந்து கிடைக்காததால் உடனடியாக சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கடத்தப்பட்ட பேருந்து நெல்லூரில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் பேருந்தை மீட்டனர். சென்னையில் இருந்து பேருந்தை திருடிச் சென்ற ஒடிசாவை சேர்ந்த ஞானரஞ்சன் சாஹூ என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் ஞானரஞ்சன் சாஹு கூலி வேலை பார்த்து வரும் காது கேளாத மற்றும் வாய் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்துள்ளது.