Advertisment

காதலர் தினத்தைக் கொண்டாடும் கூகுள்!

googllo

Google celebrates Valentine's Day

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் வருடம் முழுவதும் தங்களுக்கு பிடித்தமானவர்களிடம் தங்களின் விருப்பத்தைத் தெரியப்படுத்த முயற்சித்தாலும், இந்த நாளை அதற்கான ஒரு சிறப்பான நாளாகப் பார்க்கிறார்கள். பெரும்பாலான இளைஞர்கள் பல மாதங்களாகக் காத்திருந்து இந்த நாளில் தங்களது விருப்பத்தை, தங்களின் பிரியமானவர்களிடத்தில் தெரியப்படுத்த விரும்புவார்கள். அதன் காரணமாகவே, கடற்கரை, பூங்கா மற்றும் பல இடங்களிலும் அவர்கள் தங்களின் விருப்பங்களைத் தெரிவிக்க ஒன்று கூடுகின்றனர்.

Advertisment

பெரும்பாலானோருக்கு, இந்த நாள் அவர்களின் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறிவிடுகிறது. இளைஞர்கள் காதலர் தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள், இதனை ஆமோதிக்கும் பொருட்டு இன்று பல திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில், சில படங்கள் ஏற்கனவே வெளியாகிப் பல ஆண்டுகளைக் கடந்த படங்கள். அவைகள், தற்போது மறு வெளியீடு செய்யப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட தகுந்த விஷயம் என்னவென்றால், வெளியாகும் அனைத்து படங்களுமே காதல் படங்கள் தான். அதிலும் ஒரு படம் ‘காதலர் தினம்’ என்ற பெயரிலேயே வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இவ்வாறாக, இளைஞர்கள் மட்டுமல்லாது பெரும்பாலானோர் இந்த தினத்தைக் கொண்டாடுகின்றனர். மனிதர்களிடத்தில் பிரிவினை இல்லாமல் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதற்கு இந்த காதலும் ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதன் காரணமாகவே, தற்காலத்தில் பல சமூக அமைப்புகள் காதலையும், காதலர்களையும் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், உலக அளவில் முதன்மை நிறுவனமான கூகுள், காதலர் தினத்தைக் கொண்டாடும் விதமாக, அதன் டூடுலை வடிவமைத்துள்ளது.  

இது குறித்து, கூகுள் நிறுவனம், ‘இன்றைய டூடுல், காதலர் தினத்தைக் கொண்டாடுகிறது. கைகளால் செய்யப்பட்ட பரிசுகளின் சிறப்பை இது உணர்த்துகிறது. நீங்கள் மனப்பூர்வமாக ஒரு கடிதத்தை எழுதினாலும், ஒரு விருந்தை தயார் செய்தாலும் நம் அன்புக்குரியவர்களைக் கொண்ட இது ஒரு அறிய வாய்ப்பு. காதலர் தின வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளது.

google Valentine's Day
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe