Advertisment

“புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்...” - முதல்வர் ரங்கசாமி முக்கிய அறிவிப்பு!

py-rangasaamy-py-welcome-board

இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (20.10.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சூலில் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு மறுநாளான (21.10.2025) செவ்வாய்கிழமை அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அறிவித்திருந்தது. 

Advertisment

மேலும் இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் (21.10.2025) விடுமுறை அறிவித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21ஆம் தேதி விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு நாள் மட்டும்,அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புச்சேரி மக்களும்,  மாணவர்களும், அரசு அலுவலர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Announcement diwali cm rangasamy holiday Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe