Advertisment

''நல்லாட்சி வென்றுள்ளது... வளர்ச்சி வென்றுள்ளது...''-பிரதமர் மோடி கருத்து

A5731

''Good governance has won... Development has won...'' - PM Modi's comment Photograph: (MODI)

பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் கடந்த 6 ஆம் தேதியும் (06.11.2025), 122 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதியும் (11.11.2025) நடைபெற்றன. இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (N.D.A.), காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி (இந்தியா கூட்டணி), தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இத்தகைய சூழலில் தான் பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணி இன்று (14.11.2025) காலை 8 மணியளவில் தொடங்கியது.

Advertisment

தொடர்ந்து முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. பெரும்பாலான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. 66 தொகுதிகளுக்கான வெற்றி முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பாஜக 35 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில் 55 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 24 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 59 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. போட்டியிட்ட 61 தொகுதிகளில் கிஷன்கஞ்ச் என்ற 1 தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 5 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

Advertisment
'நல்லாட்சி வென்றுள்ளது.


வளர்ச்சி வென்றுள்ளது.

மக்கள் சார்பு உணர்வு வென்றுள்ளது.

சமூக நீதி வென்றுள்ளது.

2025 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க மற்றும் இணையற்ற வெற்றியை அளித்ததற்காக பீகாரின் ஒவ்வொரு நபருக்கும் நன்றி. இந்த ஆணை பீகார் மக்களுக்கு சேவை செய்வதற்கும், அதற்காக பாடுபடுவதற்கும் எங்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட பலத்தை அளிக்கிறது.

வரும் காலங்களில், பீகாரின் முன்னேற்றம், பீகாரின் உள்கட்டமைப்பு மற்றும் பீகாரின் கலாச்சாரத்திற்காக நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்வோம். மாநிலத்தின் யுவ சக்தி மற்றும் நாரி சக்தி செழிப்பான வாழ்க்கையை வாழ பல வாய்ப்புகளைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்திற்கு முழுமையான வளர்ச்சியை வழங்கியுள்ளது. எங்கள் சாதனைப் பதிவு மற்றும் மாநிலத்தை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். முதல்வர் நிதிஷ் குமார்மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் கூட்டாளிகளான சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி ஆகியோரை நான் வாழ்த்த விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.

b.j.p Bihar modi nda alliance
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe