திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள கோவிலூர் பகுதியில் ரூபாய் பல நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த ஆதி சிவன் கோயில் அமைந்துள்ளது. ராஜராஜ சோழர்கள் கட்டப்பட்ட இந்த ஆதிசிவன் கோயிலை புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த புனரமைப்பின் போது மன்னர் காலத்து தங்க நாணயங்கள் 103 கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதுகுறித்து ஜவ்வாது மலை காவல் துறையினர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள் தங்க நாணயங்களை கைப்பற்றி வருவாய்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் இதுகுறித்து தொல்லியல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தொல்லியல் அறிஞர்கள் அது எந்த மன்னனுடையது? எந்த காலத்தில் உருவாக்கப்பட்ட நாணயம் என ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

Advertisment

இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.