அண்மையாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை ஏற்றம் காணும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்  இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

Advertisment

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 880 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூபாய் 91 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 11,410 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னை பொறுத்தவரை வெள்ளி விலை இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 167 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது அடித்தட்டு மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment