கடந்த சில தினங்களாக சரிவைக் கண்டு வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் தங்கம் சவரன்  ரூ.1,19,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.  கிராம் தங்கம் ரூ.14.920-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.14,900 விற்பனை செய்யப்பட்டது. மேலும், சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று யாரும் எதிர்பாராத விதமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

அதே நேரத்தில், ஒரு சவரன் தங்கம் ரூ.1,21,௬௦௦ க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  தங்கம் விலை கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் தங்கம் விலை கடந்த ஆண்டைவிட மிகப் பெரிய அளவிலான உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த ஆண்டு ஆரம்பம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் சற்று சரிவு ஏற்பட்டது. இப்போது, இந்த சரிவை அடுத்து மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது.  

Advertisment

சர்வதேச பொருளாதார நிலைக்கு தகுந்தார் போல் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீது அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். அதன் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூபாய் 5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.300-க்கும். ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.