தங்கத்தின் விலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு லட்சத்தை தாண்டியது. இது வரலாற்றில் இல்லாத வகையில் முதன் முதலான விலை உச்சம் என்று கூறப்பட்டது. இருப்பினும், இதை விட வரும் ஆண்டில் (2026) இன்னும் தங்கத்தின் விலை உச்சத்தை தொடும் எனக் கணிக்கப்பட்டது. அதற்கேற்ப தங்கத்தின் விலையும் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தங்கம், ஒரே நாளில் இரண்டு முறை விலையேற்றம் கண்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் நீட்சியாக, இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து, வாங்க நினைக்கும் அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில், நேற்று தங்கம் ஒரு கிராம் 13,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஒரு சவரன் 1,11,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று மீண்டும் தங்கம் விலையேற்றம் கண்டுள்ளது. அந்த வகையில், ஒரு கிராம் தங்கம் ரூ.350 உயர்ந்து 14,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், தங்கம் சவரனுக்கு 2800 உயர்ந்து, ரூ. 1,14,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வெள்ளியின் விலையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் வெள்ளியானது இரண்டு முறை விலையேற்றம் கண்டுள்ளது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.22 அதிகரித்து, ரூ. 340 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக வெள்ளியின் விலை நேற்று ஒரு நாளில் கிலோவுக்கு ரூ.22, 000 அதிகரித்து, ரூ.3,40,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் டாலர் தொடர்ந்து வீழ்ச்சியை கண்டு வருவதால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளியின் விலை ஏற்றம் என்பது தங்கத்தின் விலையேற்ற விகிதத்தை விட அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/21/728-2026-01-21-11-48-41.jpg)