பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாக குஷீல்குமார் என்பவர் செயல்பட்டு வருகிறார். இவரது வீடு சென்னையை அடுத்த செங்குன்றத்தில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் இவரது வீட்டில் 100 சவரன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை திருடு போனதாக செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பாஜக நிர்வாகி வீட்டில் 100 சவரன் நகை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us