'Goebbels' campaign planned; no one should be confused', says Ramadoss Photograph: (pmk)
'என் கவனத்திற்கு வராமல் எக்கடிதத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. திட்டமிட்டு கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து கொச்சைபடுத்துகின்றனர்' என ராமதாஸ் அறிவித்துள்ளார்.
Advertisment
பாமகவில் ராமதாஸ் அன்புமணி இடையே வெடித்த மோதல் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில் பாமகவுக்கும் அதன் சின்னத்திற்கும் யார் உரிமையானவர் என்ற பிரச்சனை நீண்டு வருகிறது. அன்புமணி தரப்பு பாமக பாஜகஅதிமுகவின் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள நிலையில்ராமதாஸ் விரைவில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பார் என்டர் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Advertisment
இந்நிலையில் பரபரப்பு அறிக்கை ஒன்றை ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதில், 'என்னால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். தனக்கும், அன்புமணிக்கும் இடையே உள்ள உட்கட்சி பிரச்சினை முடிவுக்கு வரும் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். அதுவரை மாம்பழம் சின்னத்தையும் முடக்கி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டிருந்தது. 2025-ம் ஆண்டு மே மாதத்துடன் அன்புமணியின் பதவிக்காலம் முடிந்து விட்ட நிலையில், போலியான ஆவணங்களை தாக்கல் செய்து, 2026-ம் ஆண்டு வரை தனது பதவிக்காலம் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் கடிதம் அளித்து அங்கீகாரம் பெற்றுள்ளதாக என் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் கொடுக்கும் விதத்தில் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு, என் கையெழுத்தை போலியாக போட்டு யார் வழக்கைத் தொடர்ந்துள்ளார்கள். அதற்கு எந்த வழக்கறிஞர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை அறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர் அருளை கொச்சைப்படுத்தும் நோக்கில் சமூகவலைதளங்களில் அன்புமணி தரப்பு என சொல்லிக்கொள்ளும் சிலர் வழக்கறிஞர் அருளை கொச்சைப்படுத்தும் நோக்கில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 28.1.2026-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று திரும்பப்பெறப்பட்டது. இம்மனு 2.2.2026-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி கூறியதை தொடர்ந்து இவ்வழக்கு 24.2.2026-ம் தேதி விசாரணைக்கு வந்து இருக்கவேண்டும். அன்று தலைமை நீதியரசர் விடுமுறை என்பதால் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கை வாபஸ் பெருவதாக ஏற்கனவே கூறி கடிதம் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிமையில் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 9.3.2026-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்தால் அன்றே உத்தரவு அளிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு அன்புமணி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என கூற வாய்ப்புள்ளதால், எந்த நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இல்லை என்பதை தெரிவிக்கவே இந்த மனு திரும்பப் பெறப்பட்டது. சிவில் நீதிமன்றமே யார் தலைவர் என்பதை தீர்மானிக்க உள்ளது.
என் கவனத்திற்கு வராமல் வழக்கறிஞர் அருள் எவ்விதமான கடிதத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. திட்டமிட்டு சிலர் என்னையும், எனது தரப்பு வழக்கறிஞர் அருளையும் சமூகவலைதளங்களில் கொச்சைபடுத்தி வருகின்றனர். எனவே கட்சியினர் யாரும் குழப்பமடைய வேண்டாம். தன்னுடன் உள்ள ஒரு சில அப்பாவி தொண்டர்களை தக்க வைத்துக்கொள்ளவே இத்தகைய பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
Follow Us