GK Vasan meets Piyush Goyal and speaks for NDA alliance
சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாளை (23.01.2025) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டத் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்குபெறும் கட்சிகளைக் கூட்டணி தலைமை அறிமுகப்படுத்த உள்ளது.
ஏற்கெனவே அன்புமணி தரப்பு பா.ம.க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், நேற்று அமமுக, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் நேற்று இணைந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் தமிழகத்திற்கு வந்துள்ள மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தின.
தேசிய ஜனநாயகக் கூட்டணி பரப்புரை கூட்டத் தொடக்க விழா நாளை நடைபெற உள்ள நிலையில், பியூஷ் கோயலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று (22-01-26) சந்தித்துப் பேசினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பியூஷ் கோயலை சந்தித்த ஜி.கே.வாசன் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த 2 நாட்களாக கூட்டணி கட்சித் தலைவர்கள், அடுத்தடுத்து பியூஷ் கோயலை சந்தித்து வருவது என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுபெற்று வருவதாக கருதப்படுகிறது.
Follow Us