பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று (29-12-25) சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 4,300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணியின் பதவிக்காலம் மே 28ஆம் தேதியுடன் முடிவடைந்ததாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பாம.க தலைவராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும், தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை ராமதாஸுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து, பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்த செளமியா அன்புமணி நீக்கப்பட்டு, ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்திக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. மேலும், ஸ்ரீகாந்தியை பா.ம.க செயல் தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் , பா.மக கெளரவத் தலைவராக ஜி.கே.மணி, பொது செயலாள்ராக முரளிசங்கர், பொருளாராக சையத் மன்சூர் உசேன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய பா.ம.க கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, “பா.ம.க பதவிக்கு ஆசைப்பட்டவர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. உயிர் தியாகம் செய்து உருவாக்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தை சதியால், சூழ்ச்சியால் ஆபகரிக்க நினைக்கிறார்கள். ராமதாஸ், கண்கலங்கினார், வேதனைபட்டார். ஆனால் இப்போது, கலங்காமல் துணிந்து நிற்கிறார். ராமதாஸால் உருவாக்கப்பட்டு பதவி சுகத்தை அனுபவித்தவர்கள், அன்புமணியுடன் சென்றிருக்கிறார்கள். ஆனால், பதவிக்காக இல்லாமல் இங்கு ராமதாஸுக்கு துணையாக வந்திருக்கிறோம். ராமதாஸை திட்டியருக்கு அன்புமணி மாநில பொறுப்பு பதவி கொடுக்கிறார். இதுவா அப்பாவுக்கு செய்யும் நன்றிக்கடன்? இது நன்றிக்கடன் இல்லை, இது மாபெரும் துரோகம். இதை யாராலும் மன்னிக்க முடியாது. படிக்க வைத்து ஆளாக்கினால் இதுவா வேலை? ஒரு கும்பலை வைத்து தினமும் அவதூறாக செய்தி போடுகிறார். இனி உங்களால் பா.ம.கவை கைப்பற்ற முடியாது என அன்புமணிக்கு எச்சரிக்கையோடு சொல்கிறேன். இதை டெல்லி உயர் நீதிமன்றமே சொல்லிவிட்டது.
எந்த காலத்திலும் பா.ம.க என்றால் அது ராமதாஸ், ராமதாஸ் என்றால் அது பா.ம.க தான். என்னை பொறுத்தவரையிலும் போற்றினாலும், தூற்றினாலும் என் வாழ்நாள் முழுவதும் என்னுடைய பற்று ராமதாஸுக்கு தான். இந்த துரோகச் செயல் எடுபடாது. இனி அரசியலை ஓரம் கட்டிவிட்டு வேறு எதாவது வேலை இருந்தால் பாருங்கள். இனி தமிழ்நாட்டின் அக்கறை கொண்ட ராமதாஸின் கனவு நனவாகும். மனநலம் பாதிக்கப்பட்டவர், குழந்தை ஆகிவிட்டார் என்று ராமதாஸை அன்புமணி சொல்கிறார். அப்பா குழந்தை மாதிரி ஆகிவிட்டால் பாதுகாப்பது மகன் தானே? அன்புமணியின் செயலால், துரோகத்தால் ராமதாஸ் மனம் குன்றி உட்கார்ந்திருக்கிறார். அன்புமணி இனி அரசியல் செய்ய முடியாது. உங்களுக்கு பா.ம.க சொந்தம் ஆகாது” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/angk-2025-12-29-13-02-17.jpg)