பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது. இத்தகைய சூழலில் தான் போலி ஆவணங்களை அளித்து பாமக கட்சியை அபகரித்ததாக அன்புமணி ராமதாஸுக்கு எதிராக, ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 

Advertisment

இந்நிலையில் அன்புமணிக்கு எதிராக டெல்லி காவல் நிலையத்தில் ராமதாஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜி.கே. மணி போலீசாரிடம் அளித்துள்ள மனுவின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணத்தைக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ராமதாஸ் தரப்பில் இருந்து டெல்லி காவல் துறையில் ஒரு புகார் மனு கொடுத்திருக்கிறார். 

Advertisment

ராமதாஸ் கையெழுத்திட்ட புகார் மனுவில், “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக, நிறுவனரான ராமதாஸ் இன்று பொறுப்பில் இருக்கிறார். அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக 28.05.2022ஆம் ஆண்டு  பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார். அவருடைய பதவிக் காலம் என்பது 28.05.2025 வரை தான் எனவே அவரது பதவிக்காலம் முடிந்துவிட்டது. ஆனால்  அன்புமணி, ஒரு போலியான ஆவணத்தைத் தயாரித்து அதாவது 2023ஆம் ஆண்டு அவர் பொதுக்குழுவில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஒரு போலி ஆவணத்தைத் தயாரித்துத் தேர்தல் ஆணையத்திடம் வழங்கி இருக்கிறார். 

anbumani-silent

அதனைப் பெற்ற தேர்தல் ஆணையம் அன்புமணி 2023லிருந்து 2026ஆம் ஆண்டு வரை அன்புமணி, பாட்டாளி மக்கள் தலைவர் என அறிவித்துள்ளது. இது தேர்தல் ஆணையத்தினுடைய மோசடி நடவடிக்கை.  கடந்த ஐந்து மாத காலமாகத் தேர்தல் ஆணையத்தில் உண்மையான ஆவணங்களை எல்லாம் கொடுத்தோம்” எனப் பேசினார். 

Advertisment