புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியாண்மலை கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு சவரிமுத்து அருள்தாஸ் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் வருகிறது. அந்தப் பணத்தை எடுக்க அறக்கட்டளையில் போதிய உறுப்பினர் தேவைப்படுகிறது அதனால் ரூ.1 லட்சம் கொடுத்து உறுப்பினரானால் சில மாதங்களில் ரூ.1 கோடி தருவதாக கூறிய புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கி, திருச்சி, கரூர், பெரம்பலூர், ஈரோடு, சிவகங்கை என பல மாவட்டங்களிலும் பல ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்து பல கோடி ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். இதுவரை யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. மாறாக கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு செக்கொடுத்துள்ளார்.
மேலும், அறக்கட்டளையில் உறுப்பினர்களை அதிகம் சேர்க்க நடிகர்கள் ராதாரவி, வடிவேல், சார்லி, தாமு மற்றும் நடிகை சினேகா உள்பட ஏராளமான திரை நட்சத்திரங்களை அழைத்து வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தியுள்ளார். நட்சத்திர விடுதிகளில் விருந்து நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார். ஆனால் பணம் கொடுத்து ஏமாந்த பலரும் தமிழ்நாடு அரசிடம் புகார் கொடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு இந்த மோசடி புகார் குறித்து சிபிசிஐடி போலிசார் விசாரிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து அறக்கட்டளை நிர்வாகி குடுமியான்மலை ரவிச்சந்திரன் மற்றும் அவரது கூட்டாளி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரன் உள்பட 2 பேரை புதுக்கோட்டை சிபிசிஐடி போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களுக்கு உதவிகள் செய்து பிணையில் எடுக்க ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு அரசு வழக்கறிஞரே வேறு வழக்கறிஞர்கள் மூலம் முயற்சிகள் செய்து வருகிறார். ஆனால் ஜாமின் கிடைக்கவில்லை. மேலும் பல வழக்குகளும் பதிவாகி வருகிறது.
இந்நிலையில் ரவிச்சந்திரனை கஸ்டடி எடுத்து விசாரனை செய்த சிபிசிஐடி போலிசார் பல தகவல்களையும், மோசடியில் ஈடுபட்டவர்கள் பட்டியலையும் சேகரித்தனர். இந்த வழக்கு விசாரனையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பல புரோக்கர்களின் பட்டியலை வைத்து நேற்று (24.10.2025 - வெள்ளிக் கிழமை) காலை இலுப்பூர் காவல் சரகம் பாத்திமா நகரில் உள்ள ரவிச்சந்திரனின் அறக்கட்டளைக்கு ஆள் சேர்க்கும் புரோக்கரான ஜெய்லானி வீட்டில் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி குழுவினர் சோதனை செய்து பல ஆவணங்களை கைப்பற்றியதுடன் ஜெய்லானியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதே போல இலுப்பூரில் கிளினிக் நடத்தி வரும் காஜா மைதீனின் கிளினிக்கில் ஆய்வு செய்த சிபிசிஐடி போாலிசார் அங்கிருந்து செக் புக்களை கைப்பற்றியுள்ளனர். சிபிசிஐடி போலிசார் தனது கிளினிக்கில் நிற்பது தெரிந்து காஜா மைதீன் தலைமறைவாகி உள்ளார். மேலும் ரவிச்சந்திரனுடன் சேர்ந்து பொதுமக்களிடம் பண ஆசை காட்டி மோசடி செய்ய உதவியாக இருந்தவர்களையும் சிபிசிஐடி போலிசார் கண்டறிந்துள்ளனர்.
Follow Us