Advertisment

காதலியை தீர்த்து கட்டி தவறாக சித்தரித்த இளைஞர்; குற்ற உணர்வில்லாத பேட்டியால் சர்ச்சை!

ilai

girlfriend lost her lives by young man and misrepresented her Controversy over guilt-free interview

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் சில தினங்களுக்கு முன்பு எம்பிஏ மாணவி ஒருவர், தனது வகுப்பு தோழன் பியூஸ் தானொட்டியா என்பவருடன் பிறந்த நாள் கொண்டாடப் போவதாகக் கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.  நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. பின்னர், அந்த மாணவியின் தந்தைக்குக் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து ஒரு வீடியோ வந்துள்ளது. அந்த வீடியோவில், அந்த மாணவி யாரோ ஒரு இளைஞருடன் நிர்வாணமாக இருப்பது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

இதையடுத்து, அந்த மாணவியின் தோழன் பியூஷ் தம்னோதியாவின் வீட்டைச் சோதனை செய்தனர். ஆனால், வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே, துவாரகா பகுதியில் பியூஸ் குடியிருந்த வாடகை வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் அந்த வீட்டைச் சோதனை செய்தனர். அந்த வீட்டில் நிர்வாணமான நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டனர். அந்த சடலம் அழுகிய நிலையில் இருந்ததால், அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.

Advertisment

அதனை தொடர்ந்து, புகார் அளித்த தந்தையைச் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வரவழைத்தனர். பின்னர், அவர் அங்கிருந்த சாக்ஸை வைத்து, இது தனது மகள் தான் என  அடையாளம் காட்டினார். மேலும், பியூஸ் தான் எனது மகளைத் துன்புறுத்தி கொலை செய்துள்ளார் என அவர் குற்றம் சாட்டினார். இதையடுத்து, பியூஷ் தம்னோதியாவை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், மும்பையில் பியூஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கூறியதாவது,   ‘நாங்கள் இருவரும் ஓராண்டிற்கு மேலாகக் காதலித்து வந்தோம். இதனால், கடந்த 10 தேதி அப்பெண்ணை நான் வாடகைக்கு வசித்து வந்த வீட்டிற்கு வரவழைத்தேன். அங்கு அவரிடம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஒரு கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கினேன். அதனால் அவர் இறந்துவிட்டார். அங்கேயே அமர்ந்து மது அருந்தினேன். பின்னர் அந்த சடலத்துடன் நெருக்கமாக இருந்தேன். இதையடுத்து, அந்த பெண்ணை பற்றிய தவறான கருத்துக்களைப் பரப்புவதற்காக வீடியோவை ஒரு வாட்சப் குழுவிற்கு அனுப்பினேன். பின்னர், அந்த இடத்தில் இருந்து தப்பித்து மகாராஷ்டிராவில் உள்ள பன்வேலுக்கு சென்றேன். அங்கு ஆவிகளுடன் பேசுவதற்காக யூடியூபில் வீடியோக்களை பார்த்தேன். பின்னர், அதில் சொல்லப்பட்டது போன்று மந்திரங்களைச் செய்தேன்’ என்று அதிர்ச்சி தகவலை கூறினார்.

இந்நிலையில், அவரை கைது செய்து அழைத்துச் சென்றபோது அவர் செய்தியாளர்களிடம் பேசிய கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஏன் இந்த குற்றத்தைச் செய்தீர்கள்? எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல், ‘எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள். நடக்க வேண்டியது நடந்துவிட்டது. அதைத் தெரிந்து கொண்டு நீங்கள் என்ன போகிறீர்கள்?, நேரம் வரும்போது நானே அதைப்பற்றிச் சொல்வேன்’ என்று அசால்டாக கூறினார். சிறிதளவும் குற்ற உணர்வு இல்லாமல் இருந்த அவரது மனநிலை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Madhya Pradesh police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe