Advertisment

பெண் குழந்தை கடத்தல் சம்பவம்; பெங்களூருவுக்கு விரையும் தனிப்படை போலீசார்!

ed=sithode-chid-with-photo

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கோணவாய்க்கால் என்ற பகுதியில் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள மேம்பாலத்தின் கீழே கடந்த 5 ஆண்டுகளாக ஆந்திராவை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் கீர்த்தனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களோடு இந்த தம்பதியினரின் 5 வயது மகன் மற்றும் ஒன்றரை வயது வந்தனா என்ற மகளும் வசித்து வந்தனர். இத்தகைய சூழ்லில் தான் கடந்த 15ஆம் தேதி (15.10.2025) இரவு இரு குழந்தைகளும் கொசுவலையில் உறங்க வைத்துவிட்டு பெற்றோர் இருவரும் கொசுவலைக்கு வெளியே உறங்கி கொண்டிருந்தனர்.

Advertisment

இதனையடுத்து மறுநாள் (16.10.2025) காலை குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்த கொசுவலை அறுக்கப்பட்டிருந்தது. மேலும் ஒன்றரை வயது மகள் வந்தனா அங்கிருந்து காணாமல் போயிருக்கிறார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர் நீண்ட நேரமாகக் குழந்தையைத் தேடினர். இருப்பினும் குழந்தையைக் கண்டறிய முடியவில்லை. இதனையடுத்து தான் பெண் குழந்தை கடத்தப்பட்டது உறுதியானது. அதாவது கொசுவலையை அறுத்து மர்மநபர்கள் குழந்தையைத் தூக்கிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வெங்கடேசன் மற்றும் கீர்த்தனா ஆகியோர் உடனடியாக சித்தோடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். 

Advertisment

அதன் பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சித்தோடு காவல் துறையினர் குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை என்பதால் அந்த வழியாகச் செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் நபர்கள் குறித்துக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஒன்றை வயது பெண் குழந்தை கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

inves-1

இந்நிலையில் கடத்தப்பட்ட குழந்தையைக் கண்டறிவது தொடர்பாகப் பெங்களூருவுக்குத் தனிப்படை போலீசார் செல்ல உள்ளதாக ஈரோடு மாவட்ட எஸ்.பி. சுஜாதா தகவல்  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா இன்று (24.10.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஏ.டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, குழந்தை கடத்தல் வழக்கில் 8 மாவட்டங்களில் தொடர்புடைய 41 பேரிடம் விசாரணை நடைபெற்றது. 

அதன் அடிப்படையில் ஒரு தனிப்படை திருநெல்வேலி சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோன்று மற்றொரு தனிப்படை விரைவில் பெங்களூர் செல்ல உள்ளனர். மேலும் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நள்ளிரவு 12 மணி முதல் 01:30 மணி வரை அந்த வழியாகச் சென்ற சுமார் 120 வாகனங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் வாகன எண்களைக் கொண்டு ஆய்வு நடத்தி வரப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள 33 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 120 சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

Bengaluru Tirunelveli Investigation police sp girl child Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe