பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில் கடந்த 4ஆம் தேதி திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும்,1 மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் யாரெல்லாம் வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்பது குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று (08-03-26)ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினுடைய மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது கிரிஷ் சோடங்கர் திடீரென மயக்கம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடந்து செல்ல முடியாத அளவிற்கு மயக்கம் அடைந்ததால் அவரை அங்கிருந்த நிர்வாகிகள் உடனடியாக கைத்தாங்களாக தூக்கிச் சென்று காரில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். காலையில் அவர் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தததால் அவர் மயக்கம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/08/girishmay-2026-03-08-17-13-47.jpg)