தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இதனிடையே தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் மோதல் தற்போது தமிழக அரசியலில் பூதாகரமாக வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நேரில் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியானது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியதாகத் தகவல் வெளியானதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த செய்தி வெளியானதை அடுத்து, காங்கிரஸ் உட்கட்சி விவகாரங்களில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம் என விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் பூத் கமிட்டி நியமன பொறுப்பாளர்களுக்கான அனுமதி மறுக்கப்படுவதாகவும், தமிழக காங்கிரஸ் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த பரப்பரப்பான நிலையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று (03-01-26) தேர்தல் பணிகள் கூறித்து ஆலோசனை நடத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமாக சத்தியமூர்த்தி பவனில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலில் எத்தனை தொகுதிகள் கேட்கலாம், எந்தெந்த தொகுதிகளை கேட்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisment

ஆலோசனைக் கூட்டத்திற்கு, கிரிஷ் சோடங்கரும் செல்வப்பெருந்தகையும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அதில் கிரிஷ் சோடங்கர் பேசியதாவது, “ஜோதிமணி புகார் குறித்து விசாரணை நடத்தப்படும். பின்னர் காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர் அதன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார். இந்த விவகாரத்தில் அக்கறை இருந்தாலும், உடனடியாக ஒரு முடிவை எடுக்க முடியாது. எங்களுடைய கட்சியின் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், மேலும் பிரச்சினை என்ன என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதுபோன்ற பிரச்சினைகளை பொதுதளத்தில் வெளியிட வேண்டாம்.

நாங்கள் ஒழுக்கத்தைப் பின்பற்றும் கட்சி. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் பொதுமக்களின் மனதிலும், நிர்வாகிகளின் மனதிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். எங்கள் எம்.பி.யை நாங்கள் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். உண்மையான கவலைகள் இருந்தால் நாங்கள் அவரிடம் கேட்போம். மாற்றங்களுக்கு நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை. மற்றபடி நமது பூத் கமிட்டி மிகவும் வலுவாகச் செயல்படுகிறது. நாங்கள் ஒரு கிராமக் குழுக்களை அமைத்துள்ளோம். நாங்கள் வாக்குச்சாவடி குழுக்களுடன் தொடங்கி வாக்குச்சாவடி முகவர்களையும் சேர்த்து நியமிக்கத் தொடங்கியுள்ளோம். நமது புதிய தீர்க்கமான தலைவர்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் முழு அமைப்பும் ஈடுபட்டுள்ள விதம் குறித்து எனக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் கடந்த 58 ஆண்டுகளாக ஆட்சி செய்யவில்லை என்றாலும், எங்கள் வாக்காளர்களிடையே நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பம் எங்கள் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப, எங்கள் போராடி வருகிறோம்” என்று கூறினார். 

இதையடுத்து காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துகிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “திமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று யாராவது உங்களிடம் சொன்னார்களா? நாங்கள் ஒன்றரை மாதத்திற்கு முன்பு குழுவை அமைத்து முதல்வரைச் சந்தித்துப் பேசினோம். நாங்கள் முதலமைச்சரை சந்தித்து, கூட்டணியை விரும்புவதாகவும் கூறினோம். மிகவும் நம்பகமான கூட்டணியுடன் எங்களுக்கு நீண்டகால உறவு இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அவர்கள் விரைவில் இந்தப் பிரச்சினையை முடித்துவிடுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.