ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் 60 வது கூட்டத்தில் பங்கேற்க நாளை ஐக்கிய நாடுகள் சபைக்கு வழக்கறிஞர் ராம் சங்கர் செல்கிறார். இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலை குறித்து விசாரிக்க சர்வதேச விசாரணை குழு தேவை, இனியும் காலம் தாழ்த்தாமல் சர்வதேச குற்றவியல் நீதி விசாரணையை தொடங்கி குற்றம் செய்த நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேச உள்ளார்.
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் 60 வது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள ஐ ந மனித உரிமைகள் ஆணைய அரங்கில் கடந்த 8ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) என்பது ஐக்கிய நாடுகளின் அமைப்பாகும், அதன் நோக்கம் உலகம் முழுவதும் மனித உரிமைகளை பாதுகாப்பது, மனித உரிமை மீறல்கள் நடைபெற்றால் மீறல்களை அதை கண்டறிந்து தடுக்கவும் தண்டிக்கவும் துவங்கப்பட்ட சர்வதேச அமைப்பு ஆகும்.
உலகில் உள்ள தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து இம்முறை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையர் அவர்களையும் உறுப்பு நாடுகளையும் இலங்கை போர் குற்ற விசாரணை அதற்கான தண்டனை ஆகியன குறிப்பிட்ட காலத்திற்குள் நடைபெற வேண்டும் மற்றும் தொடர்ந்து இனம் கலாச்சாரம் மொழி மற்றும் பல்வேறு சதி வேலைகள் மூலம் அழிக்கப்பட்டு வரும் இலங்கையில் உள்ள தமிழர்களையும் தமிழர்கள் வாழும் பகுதிகளை பாதுகாத்து அவர்கள் சுதந்திரமாக வாழ வலியுறுத்தியும் பொதுவான கோரிக்கைகளை முன்னிறுத்தி லண்டனில் உள்ள பிரித்தானிய பேரவை உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் அமைப்புகளை ஒன்றிணைத்து பொதுவான உள்ள தமிழ் கோரிக்கையை சமர்ப்பித்து உள்ளது.
அதில் பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, கனடா, அயர்லாந்து, கொரியா, தென் ஆப்ரிக்கா, மொரிஷியஸ் மற்றும் இந்தியாவில் உள்ள தமிழ் அமைப்புகள் ஆதரவு தந்து உள்ளனர். தில்லியில் இருந்து தில்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக அதன் செயலாளர் Dr. ராம் சங்கர் இன்று ஜெனீவா செல்கிறார். அங்கு நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் ஆணைய அரங்கில் வரும் 24ம் தேதி பேசுகிறார்.