Advertisment

பிப்ரவரி 12இல் பொதுத் தேர்தல் : உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த வங்கதேசம்!

bangladesh-election

வங்கதேசத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு, இட ஒதுக்கீடு முறையில் எழுந்த சிக்கலின் காரணமாக, அந்நாட்டில்  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், 1400 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 22000 பேர் படுகாயமடைந்தனர். இந்த தொடர் போராட்டத்தின் காரணமாக அந்நாட்டின் அதிபர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். இந்த போராட்டம்  குறித்து அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் வழக்குப் பதிவு செய்தது, இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என்று உறுதி செய்து, அவருக்கு மரண தண்டனை விதித்தது. 

Advertisment

இத்தகைய சூழலில் தான், அந்நாட்டின் இடைக்கால அரசின் பிரதமராக முகமது யூனுஸ் பொறுப்பு வகித்து வருகிறார். இதையடுத்து, இந்த மாதம் 12ஆம் தேதி வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், நிர்வாக அதிகாரத்தைக் குறைப்பதற்கான பொது வாக்கெடுப்பும் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், மொத்தம் உள்ள 300 இடங்களுக்கு 2000க்கும் மேற்பட்டோர் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. 

Advertisment

இதில் கிட்டத்தட்ட 50 கட்சிகள் பங்கேற்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பொதுத் தேர்தலைப் பார்வையிட அந்நாட்டு அரசு இந்தியா உட்படப் பல நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று இதுவரை 330 சர்வதேச பார்வையாளர்கள் வருகைதர உள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஆறு சர்வதேச அமைப்புகள் வங்கதேசத்திற்கு வருகை தர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அதே நேரத்தில், 16 நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் உள்ள தனிமனிதர்கள் எனப் பலரும் வருகை தர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. 

வங்கதேச அரசு இந்தியாவிற்கும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்தியா தனது பார்வையாளர் குழுவை அனுப்புவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் இருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Bangladesh Election India Voting
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe