நமது அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆண்டு ஜென்-இசட் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம், காலப்போக்கில் பெரும் வன்முறையாக மாறியது. இதில் ஏராளமானோர் பலியாகினர். அதிக அளவிலானோர் காயமுற்றனர். போராட்டத்தினால் நிலைமை கைமீறிப் போனதால், அரசு நிலைகுலைந்து போனது. இதன் விளைவாகப் பிரதமராகப் பொறுப்பு வகித்து வந்த கே.பி. சர்மா ஒலி தனது பதவி விலகினார்.
இந்த நிலையில், நாட்டை வழி நடத்த இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி நியமிக்கப்பட்டார். இவர், மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் பொதுத் தேர்தலை நடத்துவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், நேபாளத்தில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் இன்று (05.03.2026) நடைபெற்று வருகிறது. நேபாள நாடாளுமன்றத்தில் கீழ் அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 275 ஆகும். இதில், 165 பேர் நேரடியாகவும், 110 பேர் விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையிலும் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடந்து வரும் தேர்தலில், ஷேர் பகதூர் டுபா (நேபாள காங்கிரஸ்), கே.பி. சர்மா ஒலி (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), புஷ்ப கமல் தஹால் (நேபாள கம்யூனிஸ்ட்) ஆகியோர் களமிறங்கியுள்ளனர். காலை முதல் தொடர்ந்து பரபரப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்தவுடன், முதலில் தொலைதூர பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்கு பெட்டிகள் வாக்கு என்னும் மையங்களுக்குக் கொண்டு வரப்படும். பிறகு, அனைத்து வாக்கு பெட்டிகளும் வாக்கு என்னும் மையங்களுக்குக் கொண்டுவரப்பட்ட பின்பு, வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைய சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே யார் முன்னிலையில் உள்ளார்கள் என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது. தற்போது இடைக்கால பிரதமராக இருந்து நாட்டின் பொதுத் தேர்தலை முன்னின்று நடத்தி வரும் கார்கி, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலின் பொது எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/05/nep-voting-line-2026-03-05-11-02-22.jpg)