Advertisment

‘இது இந்து ராஷ்டிரா, கிறிஸ்துமஸ் தொப்பிகளை விற்கக்கூடாது...’ - வியாபாரிகளை மிரட்டிய கும்பல்!

hats

Gang threatens traders who sell christmas hats in odisha

கிறிஸ்துவ மக்களால் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (25-12-25) உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை கொண்டாடுவதற்கு உலகம் முழுவதும் உள்ள மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த பண்டிகையின் போது பரிசு பொருட்கள், நட்சத்திர வடிவிலான பொம்மைகள், தொப்பி போன்றவை பரவலாக பயன்படுத்தப்படும். அதனால் அந்த பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், ஒடிசாவில் கிறிஸ்துவ பண்டிகையையொட்டி தொப்பி போன்ற பொருட்களை விற்பனை செய்த தெரு வியாபாரிகளை மதவாத கும்பல் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் உள்ள தெருயோரங்களில் கிறிஸ்துவ பண்டிகை தொடர்பான பொருட்களை வியாபாரங்களில் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் காரில் இருந்து இறங்கிய ஒரு கும்பல், ‘நீங்கள் எப்படி கிறிஸ்துவ மதம் சார்ந்த பொருட்களை விற்கலாம்?’ என்று கேள்வி எழுப்பி அந்த தெரு வியாபாரிகளை மிரட்டியுள்ளனர். மேலும், ‘இது இந்து ராஷ்டிரா, இங்கு கிறிஸ்துவ பொருட்கள் இருப்பதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளனர்.

Advertisment

அதற்கு அந்த வியாபாரிகள், நாங்களும் இந்துக்கள் தான், வறுமையின் காரணமாக வியாபாரத்திற்காக இந்த பொருட்களை விற்பதாகக் கூறினர். உடனே அந்த கும்பலில் இருந்த ஒருவர், ‘ஏழை என்றால் கிறிஸ்துவ பொருட்களைத் தான் விற்க வேண்டுமா?,  ஜெகன்நாதர் தொடர்பான பொருட்களை விற்க முடியாதா?. இது ஜெகன்நாத் பூமி, இங்கே கிறிஸ்துவ பொருட்களை விற்க அனுமதிக்கப்படாது’ என்று மிரட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கிறிஸ்துமஸ் தொப்பிகள், விளக்குகள், கலைமான் உருவம் பொறித்த தலைக்கவசங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் போன்றவற்றை விற்பது ஒரு பொதுவான நிகழ்வாகும். இந்தியாவில் சமய சார்பற்று மக்கள் வாழ்ந்து வரும்  நிலையில், இது போன்ற சில கும்பல் மத ரீதியான அல்லது சாதிய ரீதியிலான பிரச்சனைகளையும் , கலவரங்களையும் தூண்டுவது போன்ற செயலில் ஈடுபடுவது ஒட்டு மொத்த நாட்டின் இறையாண்மையைக் குலைக்கும் விதமாகவும், மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கெடுக்கும் விதமாகவும் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

#ODISHA christmas
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe