தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்தும் ஆண்கள், பெண்கள் என 38 பயணிகள் மற்றும் 5 சமையலர்கள், 2 சுற்றுலா வழிகாட்டிகள் என 45 பேர் கடந்த வாரம் 14 ந் தேதி சென்னை திருவல்லிக்கேணி விஜயலெட்சுமி டிராவல்ஸ் மூலம் பஞ்ச துவாரகை என்ற பெயரில் 16 நாள் சுற்றுலாவாக சென்றுள்ளனர். சென்னையில் இருந்து அகமதாபாத் வரை ரயிலில் சென்றவர்கள் அங்கிருந்து டெல்லி பதிவு எண் கொண்ட ஒரு பேருந்தில் சுற்றுலா புறப்பட்டுள்ளனர்.
முதலில் குஜராத் மாநிலத்தை சுற்றிப் பார்த்த பிறகு, அடுத்து ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நுழைந்து 2 துவாரகைகள் பார்த்த சுற்றுலா பயணிகள் இன்று காலை அதே பேருந்தில் புறப்பட்டு என்.எச் 58 சாலையில் அஜ்மீர் வழியாக புஸ்கர் பிரம்மா கோயில் செல்லும் வழியில் பீம் என்ற இடத்தில் பேருந்தை நிறுத்தி சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 காரில் வந்த நபர்கள், ‘இது ராஜஸ்தான், அடுத்த மாநில பேருந்துகளை அனுமதிக்க முடியாது. எங்க மாநில பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக்கனும் இல்லன்னா ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்துட்டு பேருந்தை எடுக்கனும், இல்லன்னா உடைப்போம்’ என்று தமிழ்நாடு சுற்றுலா பயணிகளை சிறைபிடித்துள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/25/raj-2026-02-25-16-24-39.jpg)
இவர்கள் சிற்றுண்டி சாப்பிட்ட ஓட்டல் உரிமையாளரும், ‘அவங்க சொல்ற மாதிரி பேருந்து ஓனருக்கு போன் பண்ணி பணத்தை அனுப்பச் சொல்லிட்டு நீங்க கிளம்புங்க’ என்று கூறியுள்ளார். இதனால், பேருந்தில் இருந்த பெண் பயணிகள் உள்பட பலரும் அச்சப்பட, உடனே சாலை மறியல் செய்வோம் என்று சில பயணிகள் சொன்ன பிறகு காரில் வந்து மிரட்டியவர்கள் அங்கிருந்து கிளம்பியுள்ளனர். அதன் பிறகு சுற்றுலா பேருந்து புஸ்கர் நோக்கி புறப்பட்டுள்ளது.
ஆனால் மீண்டும் அடுத்தடுத்த இடங்ளில் நிறுத்தப்படுவோமோ என்ற அச்சத்துடனேயே சுற்றுலாப் பயணிகள் சென்று கொண்டிருக்கின்றனர். அதனால் தமிழ்நாடு அரசு இந்த பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/25/rajasth-2026-02-25-16-23-57.jpg)