பேருந்துகளில் பயணம் செய்கிற பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறிவைத்து, சந்தடி சாக்கில் கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த பெண்கள் சிக்கியிருப்பது பேருந்து பயணிகளை அதிர வைத்திருக்கிறது.

Advertisment

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த மாரிச்சாமி மனைவி முப்புடாதி, கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் தனது ஊர் செல்ல பேருந்தில் ஏற முயன்றுள்ளார். அப்போது தனது பையில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் காணமல் போனது கண்டு அதிர்ந்திருக்கிறார். இது குறித்து அவர் சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இவரது புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் சாமி, பிரபா மற்றும் காவலர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. கேமாரவை ஆய்வு செய்திருக்கிறார்கள்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, நெல்லை செல்லும் பேருந்தில் குற்றவாளிகள் இருவரும் சென்றிருக்கலாம் என எண்ணி ரஸ்தா பேருந்து நிலையத்திலுள்ள சி.சி.டி.வி கேமராக்களையும் ஆய்வு செய்திருக்கிறார்கள். இந்த ஆய்வில் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த வேலம்மாள், அவரது மருமகள் தனலட்சுமி ஆகியோர் பணத்தைத் திருடியது தெரிய வந்திருக்கிறது. அதையடுத்து டவுன் போலீசார் அவர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். மேலும் அவர்களை விசாரித்ததில், கடந்த நவம்பர் 28ஆம் தேதியன்று சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் மாலை பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண்ணிடம் 10 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்றது டவுன் காவல் நிலையத்தில் வழக்கான நிலையில் பின்னர் வாசுதேவநல்லூர் பெண் முப்புடாதியிடம் பணம் திருடிய விபரமும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் மாமியார் மருமகளாம். இவர்களின் குலத்தொழில் ஊர் ஊராக சென்று பாத்திரங்களுக்கு ஈயம் பூசம் தொழிலாகவும் செய்து வருகிறார்கள். சம்பவம் நடந்த அன்று மாலை நெல்லை மாவட்ட மானூர் அருகே உள்ள கிராமத்தின் ஆவுடையனூர் மண்டபத்தில் குடும்பங்களோடு பிழைப்பிற்காக தங்கி உள்ளனர். தனலட்சுமி பின்னர் ரஸ்தாவின் ஹோட்டல் கடை ஒன்றில் உணவு வாங்கிக் கொண்டு வரும்பொழுது தனலட்சுமியைப் பார்த்த இரு போலீசார்கள் ஆய்வாளர் சாமி, காவலர் வெங்கடேஷ் இருவரும் சேர்ந்து தனலட்சுமி மடக்கி உள்ளனர். இப்படி குடும்பத்தோடு பேருந்து பயணிகளின் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்ட கும்பலில் பெண்கள் சிக்கியது பேருந்து பயணிகள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment