Gang caught in investigation using counterfeit notes to buy alcohol Photograph: (CUDDALORE)
சிதம்பரத்தில் கள்ளநோட்டுகளை மாற்றிய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிதம்பரம் அருகே சித்தலாபடி டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டுகளை கொடுத்து மது பாட்டில்கள் வாங்கியதாக கடையின் மேற்பார்வையாளர் செழியன்(55) என்பவர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் உள்ளிட்ட காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது டாஸ்மாக் கடையில் சிதம்பரம் அருகே உத்தமசோழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (52), முருகேசன் (52) உசுப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (42), அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (46) போலி நோட்டுகளை கொடுத்தது தெரிய வந்தது. இவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 10 எண்ணிக்கையுள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப் இவர்களுக்கு இந்த நோட்டுகள் எப்படி கிடைத்தது என்றும், இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்றும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Follow Us