தனது முன்னாள் காதலிக்கு ஆபாச செய்திகளை அனுப்பிய இளைஞரை கடத்திச் சென்று கம்பி மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி அந்தரங்க உறுப்பை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவச் குஷால் என்ற இளைஞர். இவர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் அந்த பெண், குஷாலை விட்டு பிரிந்து வேறொரு நபருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை தாங்கி கொள்ள முடியாத குஷால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில், தனது முன்னாள் காதலிக்கு குஷால் ஆபாச செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனை அந்த பெண், தனது இன்னாள் காதலனிடம் தெரிவித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், குஷாலை தாக்கத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, அந்த நபர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து குஷாலை ஏமாற்றி ஒரு காரில் கடத்திச் சென்றுள்ளார். ஏரிக்கு அருகில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று குஷாலின் ஆடைகளை கழற்றி கம்பி மற்றும் குச்சிகளால் கொடூரமாக அடித்துள்ளனர். மேலும், அவரது அந்தரங்க உறுப்புகளை குறித்து தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலை தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹேமந்த், யஷ்வந்த், சிவசங்கர் மற்றும் சாஷங் கவுடா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி, மற்ற குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.