சென்னையில் நான்கு இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டதைதத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் நேற்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. குறிப்பாக பட்டினம்பக்கம் கடற்கரையில் ஏராளமான பிள்ளையார் சிலைகள் கரைக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு மிஞ்சிய கழிவுப் பொருட்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜேசிபி மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உதவியுடன் இப்பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரை ஒதுங்கக்கூடிய குப்பைகளை உடனடியாக அகற்றக்கூடிய பணிகளில் 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு பிள்ளையார் சதுர்த்தியின் போது சிலைகள் கரைக்கப்பட்ட போது பல சிலைகள் கரையாமல் கரையில் ஒதுங்கியது. இதனால் இந்த ஆண்டு தன்னார்வலர்கள் மூலம் விநாயகர் சிலைகள் கடலில் ஆழமான இடங்களில் கரைக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு சிலைகளும் கரை ஒதுங்கவில்லை. இருப்பினும் அங்கு குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.