புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் நாகுடி அருகில் உள்ளது கீழ்க்குடி கிராமம். இந்த கிராமம் வானம் பார்த்த பூமி ஆகும். எனவே மழை பெய்தால் விவசாயம். மழை இல்லை என்றால் கிடைக்கும் கூலிக்கு வேலை செய்யும் மக்கள் வாழும் ஊர். இந்த கிராமத்தில் காளியம்மன் கோயில் அருகே வசிக்கும் பல குடும்பங்கள் மண்பாண்டங்கள் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். பல கி.மீ தாண்டி சென்று களி மண் எடுத்து வந்து அடுப்பு, குதிரை செய்வதும் சுற்றியுள்ள கிராமங்களின் எல்லை காவல் தெய்வமான அய்யனார் கோயிலுக்கு களிமண் குதிரை சிலை, கடவுள் சிலைகள் செய்தும் வருகின்றனர்.

Advertisment

இந்த ஊரில் தான் காலங்காலமாக கருவறைகளில் இருக்கும் களிமண் கடவுள் சிலைகள் செய்யும் மெய்யநாதன் வீட்டில் பிறந்த அவரது கடைசி மகள் பூமதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கல்லூரியில் படிக்க கிடைத்த வாய்ப்பையும் உதறிவிட்டு தந்தைக்கு துணையாக களிமண்ணில் கடவுள் சிலைகள் மட்டுமின்றி கருவறையில் வைக்கும் களிமண் சிலைகளுடன் மக்கள் போற்றும் மகத்தான தலைவர்களின் சிலைகளையும் அச்சு அசலாய் வடித்து வருகிறார். எங்கள் குடும்ப வறுமை, வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க வேண்டுமே என்பதற்காக எனது கனவான கல்லூரிப் படிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு அப்பாவுக்கு துணையாக மண் வேலையை தொடங்கிய நான் தற்போது தனியாக ஏராளமான சிலைகளை செய்துவிட்டேன் என்கிறார்.

pdu-ganesh-statue

மேலும், விநாயகர், காளியம்மன், மயானக்காளி, மாரியம்மன் என பல கடவுள் சிலைகள் செய்த தான் விலங்குகள், தலைவர்கள் சிலைகளும் அச்சு அசலாக செய்துவிடுவேன். எனக்கு பிடித்த தலைவர் அப்துல்கலாம் அய்யா சிலையை செய்திருக்கிறேன். தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் செய்துள்ளேன். ஐயப்பன் உடலில் விநாயகர், பாம்பின் மீது விநாயகர், யானை தலை மீது நிற்கும் விநாயகர், முருகன் வடிவில் விநாயகர் என எனது கற்பனைக்கு ஏற்றவாரு விநாயகருக்கு உருவங்கள் கொடுத்திருக்கிறேன். இந்த சிலைகளைப் பார்த்து பல மாவட்டங்களில் இருந்து வந்து பார்த்துள்ளனர். 

Advertisment

சிலைகள் செய்வதைவிட அதற்கான வண்ணங்கள் சரியாக கொடுப்பததால் தான் சிலைகள் அழகாக தெரிகிறது என்றார். மேலும், எங்களுக்கென்று ஊக்கமும் உதவியும் செய்ய யாருமில்லை. செய்யும் சிலைகள் வைக்க கூட சரியான கொட்டகை இல்லை. அதனால் மண்பாண்ட கலைஞர்களின் நலன் காக்க அரசே கொட்டகைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றார்.