தமிழகத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு) ஜி.வெங்கட்ராமன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதை அடுத்து வெங்கட்ராமனுக்கு (பொறுப்பு) டிஜிபி பதவி வழங்கப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான ஜீ.வெங்கட்ராமன் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இளங்கலை பொருளாதாரம், முதுகலை பொதுநிர்வாகம் முடித்த வெங்கட்ராமன் 1996-ல் திருச்செந்தூரில் பணியைத் தொடங்கினார்.
திருச்செந்தூரில் ஏஎஸ்பி, 1997-ல் கோவில்பட்டி, இராமநாதபுரம் ஏஎஸ்பியாக பணியாற்றியுள்ளார். 1998 ஆம் ஆண்டு எஸ்பியானதும் மத்திய அரசின் 'ரா' உளவுப்பிரிவு பணிக்குச் சென்று அதே ஆண்டு தமிழகம் திரும்பினார். 2001-ல் சிபிஐ சென்னை எஸ்பியாக பணியாற்றியவர் அதிலிருந்து 2008ல் டிஐஜியாக பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சிபிசிஐடி டிஐஜியாக இருந்தார். 2012ல் ஐஜியாக பதவி உயர்வுபெற்றார். 2019 ஆம் ஆண்டு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம், தலைமையகம் நிர்வாக பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். 2024 ஆம் ஆண்டு சட்ட ஒழுங்கு கூடுதல் பொறுப்பு டிஜிபியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தற்போது அவர் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.