Funding for Annamalai University under the Deep Sea Mission project
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஆழ்கடல் மிஷன் திட்டத்தின் கீழ் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் ரூ. 3.50 கோடி நிதி வழங்கியுள்ளது.
இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் முதன்மை ஆராய்ச்சித் திட்டங்களில் ஒன்றான ஆழ்கடல் திட்டத்தின் கீழ் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு சுமார் ரூ. 3.50 கோடி நிதி வழங்கியது. இந்த நிதி, அறிவியலை மேம்படுத்துதல் மற்றும் கடல் பல்லுயிர், வகைபிரித்தல், உயிரி மருத்துவ ஆராய்ச்சி, ஆழ்கடல் வைராலஜி மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மூன்று முக்கிய ஆராய்ச்சித் திட்டங்களை கொண்டுள்ளது.
இதில் கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் பி.முருகேசனுக்கு ரூ 1.75 கோடியை ஆழ்கடல் பாலிசீட்களின் ஒருங்கிணைந்த வகைபிரித்தல் அணுகுமுறையை மேற்கொள்வது, கண்டுபிடிக்கப்படாத உயிரினங்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்துவது, அவற்றை குறிப்பு அருங்காட்சியகங்களில் வைப்பது ஆகிய அடிப்படை தகவல்களை வழங்குவதற்கும், இரண்டாவதாக அதே மையத்தின் இணைப் பேராசிரியர் எம். ஆறுமுகம் ஆழ் கடலில் இருந்து சாத்தியமான நுண்ணுயிர் வளர்சிதை மாற்ற மேம்பாடு என்ற திட்டத்தில் ஆழ்கடலில் இருந்து நுண்ணுயிர் வளர்சிதை மாற்ற நூலகத்தை மேம்படுத்துவதற்காகவும் சுமார் ரூ 85.00 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உதவிப் பேராசிரியர் ஏ.கோபாலகிருஷ்ணன் நோய்க்கிருமி மற்றும் ஜூனோடிக் வைரஸ்கள் மற்றும் ஆழ்கடல் மற்றும் அந்தமான் நீர்நிலைகள் உட்பட இந்தியாவின் கிழக்கு கடற்கரை நீர்நிலைகளின் மைக்ரோ போரிடியன்களை ஆய்வு செய்வதற்காக ரூ. 80 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி சிப்பி மீன்களைப் பாதிக்கும் வைரஸ் நோய்க்கிருமிகளின் வீரியத்தை கண்டறிவதில் கவனம் செலுத்துகிறது. இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தினால் வழங்கப்படும் நிதி ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மேம்படுத்தும் என புவி அறிவியல் துறையின் ஆணையை பார்த்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உறுப்பினர் குழு எஸ். அறிவுடைய நம்பி, பதிவாளர் ஆர். சிங்காரவேல், புவி அறிவியல் அமைச்சகத்திற்கு நன்றி கூறினார்கள். இவருடன் அறிவியல் துறை மற்றும் கடல் அறிவியல் புலம் (கூடுதல் பொறுப்பு) புல முதல்வர் எஸ். ஸ்ரீராம், கடல்சார் உயிரியல் துறை இயக்குநர் டி. ராமநாதன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
Follow Us