கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ இன்று (09.01.2025) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று அறிவிக்கவுள்ளார். இதனால் இந்த மாநாட்டு நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Advertisment

இந்நிலையில் இந்த மாநாட்டில், “2026இல் எதிர்கால தலைமுறையின் நம்பிக்கைகளை நிறைவேற்றும் அரசாக ஆட்சி அமைய வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை  நிலைநாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.  போதைப் பொருளை விற்பனை செய்வோர், அதற்கு துணை புரிவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தூய்மைப் பணியாளர்கள்,  செவிலியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 

Advertisment


மத ரீதியிலான மோதல்களை உருவாக்குவோர் மீது காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் அரசுக்கு சொந்தமான இடத்தில் விஜயகாந்திற்கு மணிமண்டபம் அமைத்து தர வேண்டும்” என பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டணி பற்றி முடிவெடுக்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு முழு அதிகாரம் வழங்கி சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.