Advertisment

திமுக தேர்தல் அறிக்கை நிறைவேற்றமும் புதிய செயலி அறிமுகமும்!

Dmk office

2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது, அவற்றில் 364 நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் இருக்கின்றன.  40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் இருக்கிறது. மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இது 80 சதவீதமாகும் என்கிறது திமுக தரப்பு. 

Advertisment

மீதமுள்ள 101 வாக்குறுதிகளில் 37 வாக்குறுதிகள் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள். ஒன்றிய பாஜக அரசு ஒத்துழைக்காததால் அவை நிலுவையில் உள்ளன. குறிப்பாக நீட் தேர்வு ரத்து, திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பது போன்ற வாக்குறுதிகளை ஒன்றிய அரசின் மூலம்தானே நிறைவேற்ற முடியும். 
64 திட்டங்கள் தற்போது நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படாத சூழல் உள்ளது. பொதுமக்களே விரும்பாதது, உள்ளூர் போராட்டங்கள், தேவைப்படாத சூழல் நிலவுவது போன்ற காரணங்களால் இந்த 64 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

Advertisment

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்,  இல்லம் தேடி கல்வி (கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் நோக்கில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் இல்லம் அருகே கற்பிக்கும் திட்டம்), எண்ணும் எழுத்தும் திட்டம் (எட்டு வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றி படிப்பதும், எழுதுவதும் உறுதி செய்ய உருவாக்கப்பட்ட திட்டம்),  புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், நாம் முதல்வன், திறனறித் தேர்வுத் திட்டம் (10ம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வு எழுதி வெற்றிபெற்றால் கல்லூரிக் கல்வி வரை மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம்), தோழி விடுதி திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்,  பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission), தாயுமானவர் திட்டம், அன்புக் கரங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம், கலைஞரின் கனவு இல்லம், மகளிர் பெயரில் சொத்து பதிவு செய்யப்பட்டால் முத்திரை கட்டணத்தில் 1 சதவீதம் சலுகை, மகளிர் பெயரில் மட்டுமே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் ஒதுக்கீடு, உங்களுடன் ஸ்டாலின்  உள்ளிட்ட திட்டங்கள் வாக்குறுதியாக சொல்லப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் சட்ட மன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் செயலி, வாட்ஸ் ஆப் எண், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். பொதுமக்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய கருத்துக்களையும் பரிந்துரைகளையும் தெரிவிக்கலாம்.

dmk cm stalin Legislative Assembly Election manifesto
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe