Advertisment

6 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்; அந்தரங்க உறுப்பை அறுத்த வெறிச்செயல்

po

Friend misbehaviour 6-year-old daughter and cutting off his private parts

தனது 6 வயது மகளை தனது தன்பாலின ஈர்ப்பாளர் பாலியல் வன்கொடுமை செய்ததால் அவரது அந்தரங்க உறுப்பை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான ஒரு நபர், தனது மனைவியைப் பிரிந்து வசித்து வந்தார். இவருக்கு 6 வயதில் மகள் உள்ளார். இந்த சூழ்நிலையில், அந்த நபர் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து ராம்பாபு யாதவ் (35) என்பவரோடு பகிர்ந்து வாழ்ந்து வந்தார். காலப்போக்கில், இருவருக்கும் உறவு ஏற்பட்டு தன்பாலின உறவில் இருந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், இந்த வார தொடக்கத்தின் அந்த நபரின் 6 வயது மகள் தனது தந்தையை பார்க்க அறைக்கு வந்துள்ளார். அப்போது அறையில் தனியாக இருந்த ராம்பாபு யாதவ், சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அந்த நபர், ராம்பாபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், ராம்பாபு யாதவின் அந்தரங்க உறுப்பை துண்டித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராம்பாபு உடனடியாக தியோரியா மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக கோரக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், ராம்பாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், தன்பாலின உறவு குறித்து ராம்பாபு வெளிப்படுத்தியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸ், அந்த நபர் மீது விசாரணை நடத்த திட்டமிட்டனர். இந்த சூழ்நிலையில், இன்று காலை அந்த நபர் தனது அறையில் தற்கொலை செய்து இறந்து கிடந்திருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து, அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை தனது தாய்வழி தாத்தா பாட்டி வீட்டிற்கு மாற்றப்பட்டு மருத்துவ பராமரிப்பு மற்றும் ஆலோசனையைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவ இடத்திலிருந்து சான்றுகள் சேகரிக்கப்பட்டு, குழந்தையின் மருத்துவ பரிசோதனை நிறைவடைந்து தடயவியல் முடிவுகளுக்காக காத்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

police homosexual uttar pradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe