கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் முயற்சியாக 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறுமிகளுக்கு நாடு முழுவதும் ஹியூமன் பாப்​பிலோமா வைரஸ் (எச்​பி​வி) தடுப்​பூசி பிரச்​சா​ரத்தை மத்திய அரசு விரை​வில் தொடங்க இருக்கிறது. இதன்​படி கார்​டசில் தடுப்​பூசி இலவச​மாக வழங்கப்படும். இந்த தன்னார்வ திட்டம் வரும் வாரங்களில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட இருக்கிறது.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த நோய்க்கான, எதிர்ப்பு சக்தியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது மற்றும் பெண்களின் உயிரைப் பாதிக்​கும் பொது​வான புற்​று​நோய்​களில் ஒன்​றான இதற்கு எதி​ராக இந்​தி​யா​வின் போராட்​டத்தை வலுப்​படுத்​து​வது தான் இந்த திட்​டத்​தின் முக்கிய நோக்​கம்.
இந்​தத் திட்​டத்​தின் கீழ் வழங்​கப்​படும் நான்கு வகைப்​பாடு​களைக் கொண்ட எச்​பிவி தடுப்​பூசி, கருப்பை வாய் புற்​று​நோய்க்கு முக்​கிய காரண​மான எச்​பிவி வகைகள் 16 மற்​றும் 18, அத்​துடன் 6 மற்​றும் 11 ஆகிய வகைகளிலிருந்​தும் பாது​காப்​பளிக்​கும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர். உலகில் 160 நாடுகளில் நடைமுறையில் உள்ள இந்த திட்டத்தில் தற்போது இந்தியாவும் இணைந்து உள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் ஏற்கனவே கடந்த ஜனவரி 27 ஆம் நாள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/25/cancer-2026-02-25-19-47-43.jpg)