Fraud gang shows its hand to MP kalyan banerjee Missing Rs. 56 lakh
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பியின் வங்கிக் கணக்கில் மொபைல் எண்ணை மாற்றி ரூ.55 லட்சத்தை ஒரு மோசடி கும்பல் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கல்யாண் பானர்ஜி. அக்கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராக பதவி வகித்து வரும் இவர், கடந்த 2001 - 2006 வரை அசன்சோல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது கொல்கத்தா உயர்நீதிமன்ற எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் அவருக்கு சம்பள வரவு வைக்கப்பட்டது. இந்த கணக்கில் ஏராளமான பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அந்த கணக்கு நீண்ட காலமாக செயபடவில்லை. இதனால், அந்த கணக்கு செயலற்ற நிலையில் இருந்துள்ளது. இதனை கண்காணித்த மோசடி கும்பல், கடந்த அக்டோபர் 28ஆம் தேதி அந்த கணக்கின் மொபைல் எண்ணை மாற்றியுள்ளனர். அதன் பிறகு அதிலிருந்து ரூ.56 லட்சத்து 39 ஆயிரத்தை அபகரித்துள்ளனர். செயலற்ற வங்கிக் கணக்கில் இருந்து தொகை இல்லாமல் இருந்ததை கண்ட கல்யாண் பானர்ஜி, உடனடியாக எஸ்.பி.ஐ அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின்னர், கொல்கத்தா காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us